ஒரே தடவை இரு தடுப்பூசிகளையும் பெறலாமா? அரசாங்கம் வழங்கியது பதில்!

கொரோனா தொற்றைத் தடுக்கின்ற தடுப்பூசிகள் இரண்டையும் ஒரே தடவை பயன்படுத்தினால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.

கண்டி – உடப்பேராதனையைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று இரண்டு தடுப்பூசிகளையும் ஒரே தடவை பெற்றுக்கொண்டதால் மயக்கமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், அவ்வாறு ஒரே தடுப்பூசி மருந்து இரண்டையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்வதால் எவ்விதமான ஆபத்தும் நடக்காது எனவும் கூறினார்.

You May also like