எக்ஸ்பிரஸ் கப்பலில் இருந்து மீண்டும் கசிகிறது எண்ணெய்!

இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய் கசிய ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருப்பதோடு அதிலிருந்து வெளியாகின்ற எண்ணெய் குறித்து நடவடிக்கை எடுக்க குழு நியமிக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன தெரிவிக்கின்றார்.

எந்த வகையிலான எண்ணெய் கடல்நீரில் கலந்துள்ளது பற்றிய ஆய்வும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

You May also like