ரிஷாட்டின் மனைவியும், சகோதரனும் கைது

டயகம சிறுமி இஷாலியின் மர்மமான மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவியும், அவரது சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல ரிஷாட்டின் மாமனாரும், பொன்னையா என்கின்ற இஷாலினியை வீட்டுவேலைக்கு அழைத்துவந்த தரகரும் கைதாகியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் வீட்டில் 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை பணிசெய்த 22 வயது பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு அவர் மீது காணப்படுகின்றது.

 

You May also like