32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – வத்தளைக்கேணி, கடைக்காடு கடற்கரைப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிலோ 840 கிராம் கேரளகஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்ற இந்த கேரள கஞ்சா பொதிகளை கொண்டுவந்த இலங்கைப் பிரஜை தப்பிச்செல்ல முயற்சித்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு நேற்று கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் இலங்கைப் பெறுமதி 32 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

You May also like