ஜோசப் ஸ்டாலின் ஒரு பயங்கரவாதி – மொட்டுக்கட்சி விமர்சனம்!

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை கடும் வார்த்தைகளால் அரசாங்க அமைச்சர்கள் வர்ணித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டுமொருமுறை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர், ஆசிரியர்களைப் பயங்கரவாதிகள் என விமர்சித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் உதவியதாகவும் அதனால் அவர் ஒரு பயங்கரவாதி என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பல கோரிக்கைளை முன்வைத்து இணையவழி கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய பதில் வழங்கப்படாத நிலையில் ஸ்ரீலங்காத் தலைநகர் கொழும்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவரான ஜோசப் ஸ்டாலின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

இதுகுறித்து கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே. தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலின் பயங்கரவாதியைப் போல செயற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

You May also like