சைனோபார்ம் இரு டோஸினையும் பெற்ற ஒருவர் கொரோனாவினால் பலி!

சைனோபார்ம் தடுப்பூசி இரண்டையும் பெற்றிருந்த ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.

காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 73 வயதைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

இவர் மே 29ஆம் திகதி முதலாவது சைனோபார்ம் தடுப்பூசியும், ஜுன் 28ஆம் திகதி இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தை தொடர்ந்து கராப்பிடடி்ய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று அவருக்கு உறுதியாகியிருக்கின்றது.

You May also like