65 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற ஒருதொகை கேரள கஞ்சா பொதிகள் இலங்கையின் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடலோரப் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றைக் கொண்டுவந்த மூன்று சந்தே கநபர்களும் நேற்று இரவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 216 கிலோ 750 கிராம் எடை கொண்டதாக  இருக்கின்றதோடு இதன் இலங்கைப் பெறுமதி 65 இலட்சம் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கேரள கஞ்சாப் பொதிகளை கொண்டுவந்த மீன்பிடிப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

You May also like