PCR வேதனை ஏற்படுத்தியதால் தாதி மீது தாக்குதல் நடத்திய பிக்கு

பி.சி.ஆர். பரிசோதனை செய்யும்போது ஏற்பட்ட வலியை பொருத்துக்கொள்ள முடியாத பௌத்த தேரர் ஒருவர், பெண் தாதி மீது தாக்குதல் புரிந்த சம்பவம் ஆனமடுவ பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஆனமடுவ தள வைத்தியசாலையில் கோவிட் பிரிவில் பணியாற்றுகின்ற பெண் தாதியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவு கோப்பை ஒன்றை எறிந்தே பிக்கு கோபத்தை வெளிகாட்டியுள்ளார்.

இவர் ஆனமடுவ – குமாரகம விகாரையைச் சேர்ந்த தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like