முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம்-ஒருவர் காயம்!

முல்லைத்தீவு – அம்பலவான்பொக்கனை பிரதேசத்தில் இன்று காலை நடந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர், காடொன்றுக்குச் சென்று நிலத்தை வெட்டியபோது வெடிகுண்டு அல்லது வெடிக்கும் பொருள் சிதறியுள்ளது.

இதில் காயமடைந்த அந்நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

You May also like