இந்திய வீரருக்கு கோவிட் – இன்றைய போட்டி ஒத்திவைப்பு!

இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று செவ்வாய்க்கிழமை நடக்கவிருந்த இரண்டாவது T20I போட்டி நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே போட்டி ஏற்பாட்டுக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

எனினும் நாளை காலை வருகின்ற மேலதிக பி.சி.ஆர் முடிவுகளுக்கமைய நாளைய தினத்திற்கான போட்டி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டதாகவே கூறப்படுகிறது.

You May also like