செப்டம்பருக்குப் பின் நாடு முழுமையாக திறப்பு?

நாடு எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் முழுமையாக திறக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மேலும் 10.5 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 80 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

You May also like