மீண்டும் நோயாளர் கட்டில், ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படலாம்?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வைத்தியசாலையில் கோவிட் சிகிச்சைப் பிரிவில் கட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்புதேசிய வைத்தியசாலையில் தற்சமயம் வரை 250 கொரோனா நோயாளர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேவேளை இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்களில் பலரும் ஒக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தி மரண விளிம்பிலிருந்து தப்பித்து வருகின்றனர்.

இதனால் அதிக சிலிண்டர்கள் தற்போது பாவனையில் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமய, கட்டுநாயக்கவில் இன்று வந்தடைந்த சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது மேற்கண்டவாறு கூறினார்.

You May also like