சீனாவுக்கு செல்கிறது இலங்கையின் மாணிக்கக்கல்-10 வீதம் அரசாங்கத்திற்கு?

இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக்கல் சீனாவில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணிக்கக்கல் வைக்கப்பட்டுள்ள பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ள மாணிக்கக்கல் ஏலவிற்பனையில் இந்த மிகப்பெரிய மாணிக்கக் கல்லையும் விற்பனைக்கு வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்படுகின்ற பெறுமதியில் 10 வீதம் இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்தப்படவுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

சுமார் 2000 கோடி ரூபா மதிப்புள்ள இந்த மாணிக்கக்கல் நேற்று கிணறு வெட்டும்போது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May also like