செப்டம்பரில் நாட்டை திறப்போம் – பந்துல நம்பிக்கை!

நாட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளித்து முடிந்த பின்னர் நாட்டை மீளத்திறக்க முடியும் என்று வர்த்தகஅமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

களுத்துறை – புளத்சிங்ஹல பிரதேசத்தில் நேற்று புதிதாக சதொச நிலையத்தை திறந்துவைத்த பின் கருத்து வெளியிட்டபோது அமைச்சர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “செப்டம்பர் மாதமாகின்றபோது 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியளித்த நாடாக நாம் திகழ்வோம். நாளைய தினமானது அவ்வளவு இருளானதல்ல” என்றுஅமைச்சர் குறிப்பிட்டார்.

 

You May also like