கொழும்பிலிருந்து ரயிலில் எடுத்துசெல்லப்பட்ட எரிபொருள் மாயம்?

கொழும்பிலிருந்து காலிக்கு ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட பெருந்தொகையான எரிபொருள் மாயமாகியிருப்பது பற்றி விசாரணைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொலன்னாவையிலிருந்து காலிக்கு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட 13476 லீட்டர் எரிபொருள் இவ்வாறு மாயமாகியுள்ளது.

ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகளின் சங்கம் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றது.

இதன் நட்டமாக 13 இலட்சத்து 63700 ரூபா என்றும் கணிப்பிடப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளரான கசுன் சாமர ஜயசேகர தெரிவித்தார்.

மார்ச் 21ஆம் திகதியிலிருந்து 7 நாட்களில் இவ்வாறு எரிபொருள் மாயமாகியிருப்பதே தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

You May also like