ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் ரிஷாட், ரியாஜ் தொடர்பு-நீதிமன்றில் அம்பலம்!

ஈஸ்டல் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு, அப்போதைய அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் விசேட சலுகைகளை வழங்கியிருந்த விதம், பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தது.

எந்தவொரு நியாயமான காரணங்களும் இன்றி, தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதம் என தெரிவித்து, ரிஷாட் பதியூதீன் மற்றும் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே, சட்ட மாஅதிபர் திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணைகள் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

You May also like