கூட்டணியில் இனி ரிஷாட் இல்லை -சஜித் திட்டவட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது கட்சியின் உறுப்பினர்களை எதிர்வரும் நாட்களில் கூட்டணியில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஹரின் பெர்ணான்டோவுடன் இன்று வருகைதந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனை மறைமுகமாகக் கூறினார்.

ரிஷாட் கட்சியைச் சேர்ந்த பலரும் 20ஆவது திருத்தம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகளில் கூட்டணியின் தீர்மானங்களை எதிர்த்து செயற்பட்டதால் அவர்களை கூட்டணியிலிருந்து விலக்கிவைத்துவிட்டதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

You May also like