களுத்துறையில் மூன்று நாட்கள் சிசு கொரோனாவினால் பலி

பிறந்து மூன்றே நாட்களான சிசுவொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.

களுத்துறை – வெலிபென்ன, பெலிவத்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிசுவானது, பெற்றோருக்குப் பிறந்த முதல் குழந்தை என்பதே இங்கு மிகக்கவலைக்குரிய விடயமாகும்.

நாகொடை வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றதன் பின் வீடு திரும்பிய நிலையில் குழந்தை உயிரிழந்தது.

 

You May also like