இஷாலினியின் உடல் பேராதனைக்கு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த ஹிஷாலினியின் பூதவுடலை தோண்டி எடுத்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறு நுவரெலியா நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று விடயங்களை தெளிவூட்டிய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி லுஷிகா குமாரி ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

You May also like