ஜயந்த கெட்டகொடவுக்கு வந்தது புதுப்பிரச்சினை:வழங்கப்பட்ட பதவியும் கேள்விக்குறி

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்த முன்னாள் எம்.பி ஜயந்த கெட்டகொடவுக்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அவருக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் பதவி அளிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஜகத் வெள்ளவத்தைதான் அப்பதவியில் இருந்து வருகின்றார்.

திரைசேறியின் செயலாளரால் ஜயந்த கெட்டகொடவுக்கு இப்புதிய பதவி அளிப்பதற்கான கடிதமும் கடந்த 7ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டது.

இருந்த போதிலும் அந்த கடிதத்தை இதுவரை ஏற்றுக்கொள்ளாத ஜகத் வெள்ளவத்த, பதவியை இன்னும் இராஜினாமா செய்யாமலிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May also like