12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது.

அதற்படி 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியளிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தின் திறப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

You May also like