ஈஸ்டர் தாக்குதல் வழக்கு எனக்கெதிராக வராது-இப்படி கூறினார் மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் விவகார விசாரணையில் தனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்படாது என தாம் நினைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

காலியில் இன்று நடந்த கட்சியின் கூட்டத்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதோரின் பொறுப்புக் கூறல் பட்டியலில் மைத்திரியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like