எம்.பிக்களுக்கு 03ஆம் திகதி கொரோனா பரிசோதனை-கடந்தமுறை ஐவரே பங்கேற்பு?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் துரித அன்டிஜன் கொரோனா பரிசோதனை வருகின்ற 03ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 03ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், அதில் கலந்துகொள்ள வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனையில் பங்கேற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த அமர்வின்போது கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட போதிலும் அதில் வெறும் ஐந்து எம்.பிக்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like