சினோவெக் இறக்குமதியல்ல, கண்டியில் உற்பத்தி செய்வோம்-அரசாங்கம் அறிவிப்பு!

சினோவெக் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான எந்த இறுதிமுடியும் எடுக்கவில்லை என்று ஔடதக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமய தெரிவிக்கின்றார்.

கோவிட் தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்றைக்கூட செயற்திறனாகக் கட்டுப்படுத்தும் திறன், சினோவெக் தடுப்பூசிக்கு இல்லை என்று தெரிவித்து வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் அவற்றை கொள்வனவு செய்ய இருப்பதாக டெய்லி மிரர் பத்திரிகை இன்று தெரிவித்திருந்தது.

எனினும் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமய இந்த செய்தியை நிராகரித்தார்.

இறக்குமதியல்ல, மாறாக அந்த சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்யப்போவதாகவும் குறிப்பிட்டார்.

You May also like