சரத் வீரசேகரவிடம் இருந்து இரு நிறுவனங்களை அதிரடியாகப் பறித்தார் ஜனாதிபதி

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கீழிருந்த இரண்டு நிறுவனங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு அமைச்சிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி அமைச்சர் வீரசேகரவின் விடயதானங்களில் ஒன்றாகிய சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்சேவை அபிவிருத்தி படையணி திணைக்களம் என்பன ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு மீதமிருப்பது இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய பொலிஸ் அப்பியாச நிறுவனம் ஆகியன மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May also like