உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு-இலங்கையில் மீண்டும் கூடுமா?

உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த வாரத்திற்குள் மட்டும் 2 சதவீத விலை உயர்வை காண்பிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரேன்ட் வகையிலான கச்சாய் எண்ணெய் பரல் ஒன்றின் விலை 75 அமெரிக்க டொலர்களாகும்.

கேள்வியை விடவும் நிரம்பல் குறைந்தமை, கோவிட் தடுப்பூசி பணிகள் காரணமாக தொற்று தாக்கம் குறைந்திருப்பதுவும் இதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

எவ்வாறாயினும் உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை தாக்கமானது, இலங்கை உள்நாட்டுச் சந்தையில் விலை அதிகரிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

You May also like