அமைச்சர் டலஸும் தனிமைப்படுத்தலில்…!

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் அமைச்சர் மேற்படி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்சவும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like