திங்கள் முதல் பயணத்தடை முற்றாக நீக்கம்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 02 மாதங்களாக அமுலில் இருந்துவருகின்ற மாகாணங்கள் இடையேயான பயணத்தடை வருகின்ற திங்கட்கிழமை முதல் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே 11ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையிலான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் மே மாதம் 30ம் திகதி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் அந்த பயணக் கட்டுப்பாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றமை குறித்து இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

You May also like