இன்றுமுதல் போக்குவரத்து சேவை வழமைக்கு;ஆனால் கட்டணம் உயர்வு?

பயணத்தடை நாளை முதல் நீக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் மாகணங்களுக்கு இடையேயான போக்குவரத்து வசதி மீள தொடங்கப்படுகிறது.

இதேவேளை ஒரு மருந்தளவு கொவிட் தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதோர், பஸ்களில் பயணிக்கும் போது, சாதாரண பஸ் கட்டணத்தை விடவும் இரண்டு மடங்கான பஸ் கட்டணத்தை அறவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படுகின்றமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

You May also like