செய்நன்றி;அமைச்சர்களுக்கு 5ம் திகதி விருந்து வைக்கிறார் கம்மன்பில

தமக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுந்தரப்பு அணியினர் தோற்கடித்ததற்கு நன்றி கூறும் முகமாக அமைச்சர் உதய கம்மன்பில விசேட விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த விருந்து வரும் 5ம் திகதி தலவத்துகொடையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடக்கவுள்ளது என கூறப்படுகிறது.

மேலும் இதற்கு ஆளும் கூட்டணியில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

You May also like