அரசாங்கத்திடம் தற்சமயம் பணம் இல்லை:பகிரங்கமாக போட்டுடைத்த அமைச்சர்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கேட்கின்ற சம்பளப் பிரச்சினைத் தீர்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு அரசாங்கத்திடம் தற்சமயம் பணம் இல்லையென்று தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் மாலை நடந்தது. இந்தக் கூட்டத்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறினார்.

ஆசிரியர்கள், அதிபர்களுக்கான சம்பளப் பிரச்சினையை தீர்க்க 56 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், ஆனால் தற்சமயம் அரசாங்கத்திடம் அவ்வளவு பணம் இல்லை என்பதால் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

You May also like