அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொரோனா!

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை அவருக்கு நடத்திய துரித என்டிஜன் பரிசோதனையின் போது தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் நாளை புதன்கிழமை அமைச்சர் PCR பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, டலஸ் அலகப்பெரும ஆகியோர் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like