அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;இலங்கைக்கும் எச்சரிக்கை

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே போர்ட்பிளேயரில் 4.3 ரிக்டர் அளவில் பூமியதிர்ச்சி  உணரப்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி 2021-08-03 – 09:12:12 மணிக்கு பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், இலங்கை கரையோர பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

You May also like