மஹிந்த தலைமையில் நேற்று நடந்த ஆளுங்கட்சி சந்திப்பில் மோதல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டணி உறுப்பினர்கள் சந்திப்பில் கடும் சலசலப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் நேற்று இரவு நடந்த இச்சந்திப்பில் ஆளும் பொதுஜன முன்னணி மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து இதன்போது அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிலைமையை சமாளிக்க பிரதமரினால் குழு ஒன்றும் அமைக்கப்பட்ட அதேவேளை, குழுவின் இறுதி பரிந்துரை வரும்வரை சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க மாட்டேன் என பிரதமர் தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May also like