ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்- 38 பேர் அதிரடியாகக் கைது!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 38 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்சமயமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இவர்கள் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பயணித்த வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

You May also like