நாடாளுமன்றம் முன் கலவரம்-மஹரகம OICக்கு மூன்று மணிநேர சத்திரசிகிச்சை

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் H.H.ஜனகாந்தவிற்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நேற்று (03) அனுமதிக்கப்பட்ட நிலையில், அவசர சத்திர சிகிச்சை நடத்துவதற்காக அவரை தலவத்துகொட பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரியின் மூன்று விரல்களில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சுமார் மூன்று மணிநேர சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like