நாளை மருத்துவமனைகளில் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு…!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் மற்றும் அனைவரும் பணிபகிஷ்கரிப்பை நாளை வியாழக்கிழமை நடத்தவுள்ளனர்.

அதன்படி நாளை காலை 06 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபகிஷ்கரிப்பை நடத்தவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் அனைவரையும் திங்கட்கிழமை முதல் வழமைபோல சேவைக்கு அரசாங்கம் அழைத்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் பணிபகிஷ்கரிப்பை நடத்தவுள்ளதாக தாதியர்கள் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இந்தப் பணிபகிஷ்கரிப்பிற்கு 44 தொழிற்சங்கங்கள் இணையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

You May also like