இன்று மருத்துவமனை செல்கின்றீர்களா? தாதியர்கள் வேலைநிறுத்தம்..!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் மற்றும் அனைவரும் பணிபகிஷ்கரிப்பை இன்று வியாழக்கிழமை நடத்துகின்றனர்.

அதன்படி இன்று காலை 06 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபகிஷ்கரிப்பு இருக்கும் என்று அரச தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் அனைவரையும் திங்கட்கிழமை முதல் வழமைபோல சேவைக்கு அரசாங்கம் அழைத்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் பணிபகிஷ்கரிப்பை நடத்துவதாக  தாதியர்கள் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

 

 

You May also like