இஷாலினிக்கு தீ பற்றியபோது CCTV கமராக்களில் சம்பவம் பதிவாகவில்லை?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணான பணிபுரிந்த தமிழ்ச் சிறுமி தீப்பற்றி எரிந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகவில்லை என்று பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

16 வயது இஷாலினி என்ற சிறுமி ரிஷாட் பதியூதீனின் இல்லத்தில் தொழில்புரிந்த நிலையில் கடந்த மாதம் உயிரிழந்திருந்தார்.

குறித்த சிறுமிக்கு தீப்பற்றிய சந்தர்ப்பத்தில் அவர் ஓடிச்சென்று வீட்டு வளாகத்திலிருந்த குளத்தில் பாய்ந்ததாக வீட்டிலுள்ளவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.

இருந்த போதிலும் அதனை உறுதிப்படுத்தும் அளவுக்கு சி.சி.டி.வி காணொளிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டில் 16 சி.சி.டி.வி கமராக்கள் இருக்கின்ற போதிலும் செயற்பாட்டில் 14 கமராக்களே உள்ளன.

 

You May also like