கொழும்பில் கைதாகிய ஆசிரியர்களை சந்திக்க சஜித்திற்கு தடைவிதித்த பொலிஸார்!

கொழும்பில் நேற்று கைதாகிய ஆசிரியர்கள் அதிபர்கள் என 44 பேர் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை சந்திக்க சென்ற எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினருக்கு பொலிஸார் இடமளிக்காத சம்பவம் இன்று இடம்பெற்றிருக்கின்றது.

சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினர், ஆசிரியர்களை சந்திக்க துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு இன்று வியாழக்கிழமை காலை சென்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் வழிமறித்த பொலிஸார், அவர்களை சந்திக்க இடங்கொடுக்கவில்லை.

மாறாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை இன்று பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பதிலளித்துள்ளனர்.

 

You May also like