டெல்டா தொற்றினால் மருத்துவமனைகளில் மரணித்து விழும் நோயாளர்கள்…!

இலங்கையில் தற்சமயம் கொரோனா தொற்று பரவிவருவது குறித்து இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நாடாளுமன்றத்தில் இன்று எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்ற கோவிட் நோயாளர்கள் பலருக்கும் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனால் அடுத்த வாரத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குதி செய்யவிருப்பதாக அவர் கூறினார்.

விசேடமாக டெல்டா தொற்று பரவியமை காரணமாக பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வைத்தியசாலையிலேயே உயிரிழக்கும் அவல நிலைமை ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டமானது மிகவும் பாரிய அச்சறுத்தலை சுகாதாரக் கட்டமைப்புக்கு ஏற்படுத்துவதால் போராட்டங்களை கைவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

You May also like