பிரபல ஊடகமொன்றின் ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தலில்…!

ஹிரு தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி ஊடகவியலாளர்களாகிய சமுதித்த சமரவிக்ரம, மதுஷான் டி சில்வா, கலிந்து விதானகே ஆகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அந்தத் தொலைக்காட்சி நடத்திய “சலகுன”  (அடையாளம்) என்ற நேரலை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே ஊடகவியலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அண்மையில் பங்கேற்றிருந்த முன்னாள் எம்.பி நாமல் கருணாரத்னவும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

You May also like