மாத்தளையில் ஒரு நகரம் தாமாகவே முடங்கியது-கோவிட் அச்சத்தில் மக்கள்!

மாத்தளை – யடவத்த நகரில் 174 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நகரம் இன்றைய தினத்தில் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.

குறித்த நகருக்கு அருகே உள்ள கிராமங்கள் பலவற்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னளர்.

இதேவேளை, யட்டவத்த நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே மக்கள் நகருக்கு செல்வதை இன்று தவிர்த்துக் கொண்டுள்ள அதேவேளை, நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

You May also like