மற்றுமொரு எம்.பிக்கு கொரோனா

நாடாளுமன்றத்தில் மற்றுமொரு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாத்தளை மாவட்ட எம்.பி ரோஹண திஸாநாயக்கவுக்கு இவ்வாறு தொற்று உறுதியாகியிருப்பது இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் இனங்காணப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு அடுத்தபடியாக ரோஹண திஸாநாயக்கவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May also like