டெல்டா உச்ச அபாய கட்டத்தில் கொழும்பு-75 வீதம் பரவியதாக தகவல்!

கொழும்பில் கொவிட் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பில் டெல்டா வைரஸ் 75 சதவீதம் பரவியுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஜுலை மாத முதல் வாரத்தில் 19.3 வீதமாக காணப்பட்ட டெல்டா வைரஸ், ஜுலை மாதம் இறுதி வாரத்தில் அது 75 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May also like