ஹரினும் தனிமைப்படுத்தலில்…!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் கொரோனா தொற்றுக்குள்ளான சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை அவரது உறவினரின்  இறுதி சடங்கிற்கு அழைத்து வந்தபோது நேற்று முன்தினம்  சந்தித்தமையாலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில்  சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May also like