நாடு முடக்கப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

நாடு முழுதும் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து விசேட அறிவுறுத்தலையும் அவர் இன்று வெளியிட்டார்.

இதன்படி, 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபமொன்றில் 150 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

அத்துடன், 500ற்கு குறைவானோர் அமரும் வகையிலான திருமண மண்டபத்தில் 100 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May also like