இலங்கையில் ஆதி ஒருவரும் கொரோனாவினால் பலி!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஆதி வாசி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்பானே பிரதேசத்தில் உள்ள ஆதிவாசி ஒருவரே இவ்வாறு கோவிட் காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கோவிட் தொற்று காரணமாக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்திருக்கின்றார்.

இந்நிலையில் இலங்கையில் ஆதிவாசி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதல் சம்பவம் இதுவாகும்.

You May also like