வெளியே நடமாட வேண்டாம் – அரசாங்கம் இறுதி எச்சரிக்கையை வெளியிட்டது!

டெல்டா தொற்று தீவிரமடைந்து வருவதால் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாறாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும், அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like