கொழும்பில் மீண்டும் குண்டு வெடிப்பா? பொலிஸார் தீவிர விசாரணை!

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்புகள் இடம்பெறவுள்ளதாக வெளியான சமூக வலைத்தளத் தகவல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி நபர் ஒருவர் இவ்வாறு போலிச்செய்தி ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பியிருந்தார்.

அந்த நபரே மீண்டும் ஒருதடவை போலியான தகவலை வெளியிட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.

மிரிஹான, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கல்கிஸை, நுகேகொடை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெறலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

You May also like